இந்த உடையை உடுத்தினால் தான் வசதியாக உள்ளது - உத்தமபுத்திரன் பட நடிகை வெளியிட்ட புகைப்படங்கள்..!


தனுஷ், ஜெனிலியா நடித்த ”உத்தமபுத்திரன்” படம் மூலம் கோலிவுட் வந்தவர் தெலுங்கு நடிகையான சுரேகா வாணி. ”காதலில் சொதப்புவது எப்படி” படத்தில் அமலா பால் அம்மாவாகவும், ”எதிர்நீச்சல்” படத்தில் சிவகார்த்திகேயன் அம்மாவாகவும் நடித்திருந்தார். 

மேலும், நடிகர் விஜய்யின் ”மெர்சல்” படத்தில் நர்ஸாகவும் நடித்துள்ளார் சுரேகா. அதுமட்டுமல்லாமல் இவர் அண்ணி, அக்கா, அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 

தெய்வத்திருமகள் படத்தில் எம்.எஸ். பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார். படங்களில் குடும்பத்து குத்து விளக்காக நடித்து வரும் சுரேகா வாணி சமீப காலமாக கவர்ச்சி உடைகளில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி வந்தார்.


இந்நிலையில்,தற்போது புடவை சகிதமாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு " எப்போதும் காட்டன் புடவை உடுத்துவதைதான் விரும்புகிறேன். இதுவே, வசதியாக உள்ளது." என்று கூறியுள்ளார்.--Advertisement--
Share it with your Friends