அதுக்குள்ள என்ன அவசரம் - "கைதி" படத்தால் காண்டான திரையரங்கு உரிமையாளர்கள்..!


கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிகில் படத்திற்கு போட்டியாக வெளியானது கைதி. படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் பறந்தன. 

இதனால், கைதி திரைப்படம் நல்ல வசூலை பெற்று 100 கோடி கிளப்-ல் சேர்ந்தது. இந்த படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு ஒரு மைல் கல்லாக அமைந்தது. மேலும், நடிகர் கார்த்திக்கும் நீண்ட நாள் கழித்து ஒரு ஹிட் படமாக அமைந்தது கைதி.

இந்த படம் இன்னமும் திரையரங்குகளில் நல்ல கூட்டத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்  ஆன்லைனின் HD தரத்தில் அதிகாரபூர்வமாக ரிலீஸ் செய்துள்ளது படத்தின் ஆன்லைன் உரிமையை வாங்கிய நிறுவனம்.

இதனால் தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து விடும் என கடுப்பாகி உள்ளார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.

--Advertisement--
Share it with your Friends