ராஜமௌலியின் கண்டுபிடிப்பு - வைரலாகும் ஒலிவியா மோரிஸ்-ன் ஹாட் புகைப்படங்கள்..!


பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கிவரும் 'RRR' படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். 

ஆங்கிலேயர் கால பின்னணியில் சுதந்திரப் போராட்ட காலத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் இருவரும் சுதந்திர போராட்ட வீரர்களாக நடிக்கின்றனர். 

இந்த படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கிறார் என்கிற சஸ்பென்ஸ் நிலவி வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் லண்டனைச் சேர்ந்த ஒலிவியா மோரிஸ் என்கிற தியேட்டர் ஆர்டிஸ்ட் நடிக்கிறார் என்கிற தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ராஜமவுலி. 

இதனைத்தொடர்ந்து அன்றைய தினம் இந்தியா முழுவதிலும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இரண்டாவது நபராக மாறினார் ஒலிவியா மோரிஸ். ஆங்கிலேயே இளவரசியாக நடிப்பதற்காகத்தான் லண்டனைச் சேர்ந்த இவர் கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 


இதுமட்டுமல்ல இவர் ஏற்கனவே நடித்துள்ள "7 ட்ரையல் 7 டேய்ஸ்" என்கிற தொடரில் இவரது நடிப்பை கண்டு வியந்து போய், அதன்பிறகே இவரை இந்த படத்தில் கதாநாயகியாக்கி உள்ளாராம் ராஜமௌலி.


யார் இந்த ஒலிவியா மோரிஸ் என்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் இவரை கூகுளில் தேடியுள்ளனர். மேலும், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3000+ ஃபாலோவர்களை மட்டுமே பெற்றிருந்த ஒலிவியா ஒரே நாளில் 29000+ ஃபாலோவர்களை பெரும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

இந்நிலையில், பிகினி உடையில் அவர் எடுத்துக்கொண்ட ஹாட் செல்ஃபி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.--Advertisement--
Share it with your Friends