எத்தனை கோடி என்றாலும் ஓ.கே..! எங்க பையனை மாஸ் ஹீரோவா ஆக்குங்க..! - உங்க புல்லட்-டை நான் பாய வைக்கிறேன்..!


இங்லீஷ் இயக்குனர் இயக்கத்தில் உருவாகிய புல்லட் திரைப்படம் நீண்ட நாட்களாக பாயமல் துப்பாக்கியிலேயே தூங்கி வருகின்றது. இந்நிலையில், ஒருவழியாக பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் உதவியால் இன்னும் சில தினங்களில் புல்லட் பாயவுள்ளது. 

இந்த உதவிக்காக அந்த தயாரிப்பாளர் போட்ட கண்டிஷன் தான் இப்போ விஷயமே. ஆம், என்னுடைய சொந்தக்கார பையன் ஒருத்தன் இருக்கான். அவனை மாஸ் ஹீரோவா வச்சி ஒரு படம் பண்ணி குடுங்க, எத்தனை கோடி செலவானாலும் பராவயில்லை. ஹிட் படமா இருக்கணும். இதை செஞ்சு குடுத்தா உங்களோட புல்லட் பாயுரதுக்கு நான் ஹெல்ப் பண்றேன் என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர். 

சமீப காலமாக பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள அந்த இங்லீஷ் இயக்குனருக்கு இந்த டீலிங் பிடித்து போனதால் சரி என்று மண்டையை ஆட்டியுள்ளார். புல்லட் படத்தின் ஹீரோ நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அசுரத்தனமான வெற்றி பெற்றது. 

இதனால், நாயகனின் மார்க்கெட் பீக்கில் உள்ளது. ஆனால், புல்லட் படத்தில் நடித்த ஹீரோயின் நிலைமை தான் ஐ.சி.யூ-வில் கிடக்கிறது. அறிமுகமான புதிதில் அந்த நடிகையை கொண்டாடி தீர்த்னர் இள வட்டங்கள். ஆனால், இப்போது அந்த அளவுக்கு அவருக்கு வரவேற்பு இல்லை என்பதால் புல்லட் பாய்ந்தாலும் சரியாக சுடுமா..? என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

இது ஒரு பக்கம் இருக்க, முன்னணி ஹீரோ ஒருவருக்காக எழுதி வைத்திருந்த ஒரு படத்தின் கதையை சிறிது பட்டி டிங்கரிங் எல்லாம் பார்த்து தயாரிப்பாளரின் சொந்தக்கார பையனை வைத்து படம் எடுக்க கேமராவை தயார் செய்து கொண்டிருக்கிறார் இங்லீஷ் இயக்குனர்.

--Advertisement--
Share it with your Friends