"இந்த அளவிற்கு கீழ்த்தரமாகவா..?" -ப்ரியா ஆனந்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!


இயக்குனர் கிரிசாயா இயக்கத்தில், நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் ஹீரோவாக நடித்து நடிகை பனிதா சாந்து ஹீரோயினாக நடிக்க நேற்று வெளிவந்த படம் 'ஆதித்ய வர்மா'. 

இந்த படம் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கு தெரிந்த விஷயம். இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக படத்தின் நாயகி பனிதா சாந்துவை விட நடிகை பிரியா ஆனந்த் கேரளா, கர்நாடகா என சென்று அதிகமாக பில்ட்அப் கொடுத்து பேசினார். 

படத்தில் அவரும் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருப்பார் போலிருக்கிறது, அதனால்தான் இப்படி பிரமோஷனில் கலந்து கொண்டுள்ளார் என்று தான் ரசிகர்கள் பலரும் நினைத்திருப்பார்கள். 

ஆனால், படத்தைப் பார்த்த பிறகு பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நடிகை பிரியா ஆனந்த் ஓரிரு காட்சிகளில் மட்டுமே நடித்திருக்கிறார். அவர் நடித்திருக்கும் சினிமா நடிகை கதாபாத்திரம் சினிமா பிரபலங்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

ஒரு சினிமா நடிகை கதாபாத்திரத்தை இந்த அளவிற்கு கீழ்த்தரமாகவா காட்டுவது..? நடிகையை இப்படி காட்ட வேண்டிய அவசியம் படத்தில் இல்லை. அவரது கதாபாத்திரத்தால் படத்திற்கோ, கதைக்கோ எந்தவிதமான பலனும் இல்லை. 

தமிழுக்கு ஏற்றபடி சில காட்சிகளை மாற்றியிருக்கலாம், தவிர்த்திருக்கலாம் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.

--Advertisement--
Share it with your Friends