நடிகை மீனாவின் வீட்டை கைப்பற்றிய நடிகர் சூரி - ஆச்சரியத்தில் கோலிவுட்


தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வளம் வந்த நடிகை மீனாவின் வீட்டை காமெடி நடிகர் சூரி விலைக்கு வாங்கியுள்ளார். வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் "பரோட்டா சூரி" என்று பிரபலமானார் நடிகர் சூரி. 

தொடர்ந்து, சிவகார்த்திகேயன், அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்தன் மூலம் காமெடி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். அடுத்து இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் ஹீரோவாகவும் நடிக்கவுள்ளார் சூரி. 

நடிப்பு மட்டுமல்லாமல், தனுடைய சொந்த ஊரில் சில ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளையும் நடத்தி வருகிறார் சூரி.இந்நிலையில், சென்னை சாலி கிராமம் பகுதியில் உள்ள நடிகை மீனாவின் பிரமாண்ட வீட்டை 6.5 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார். 

இதில் ஸ்பெஷல் விஷயம் என்னவென்றால், மீனாவின் வீட்டிற்கு அருகில் தான் நடிகர் சூரியின் அலுவலகம் இருக்கிறது. அவருடைய அலுவலகத்திற்கு அட்ரஸ் கேட்டால் மீனாவின் வீட்டிற்கு அருகில் என்று தான் கூறுவார்கள். 

ஆனால், இனிமேல், சூரியின் வீட்டிற்கு அருகில் தான் என்று கூற வேண்டும் என்பாதால் ஆச்சரியத்தில் உள்ளனர் கோலிவுட் காரர்கள். சில மராமத்து பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் வீட்டில் பால் காய்ச்சி குடியேறவுள்ளார் சூரி.

--Advertisement--
Share it with your Friends