அவளே வாங்கிட்டா..! உனக்கும் கிடைக்கும் அப்ளை பண்ணு..! - காருக்காக மூணு நடிகையை உசுப்பிவிட்ட தாய்குலம்..!


சமீபத்தில் மொத் மொத் நடிகை விலை உயர்ந்த புதிய கார் ஒன்றை வாங்கினார். இதனால், நீயும் அந்த காரை வாங்க வேண்டும் என்று மூணு நடிகைக்கு அவரது அம்மா ஆர்டர் போட்டுள்ளாராம். 

அந்த நடிகையை விட நீ சீனியர். உனக்கு கண்டிப்பாக அந்த கார் கிடைக்கும் என்று நடிகையை உசுப்பி விட்டுள்ளார் தாய்க்குலம். பணம் ஒரு பிரச்சனை இல்லை என்றாலும் எல்லோராலும் அந்த காரை வாங்கி விட முடியாது. 

கார் வாங்க விண்ணப்பிக்கும் நபர்களின் இமேஜ் மற்றும் சமூகத்தில் அவர்களுடைய மதிப்பு ஆகியவற்றை வைத்து தான் காரை கொடுக்கலாமா..? வேண்டாமா..? என்று அந்த நிறுவனம் முடிவு செய்யும். எனவே, எல்லா பணக்காரர்களும் அந்த காரை வாங்கி விட முடியாது என்பது அந்த நிறுவனத்தின் விதிமுறை. 

ஆனால், தன்னை விட வயதும் அனுபவமும் குறைவான மொத் மொத் நடிகைக்கே கிடைத்துள்ளது என்றால் கண்டிப்பாக எனக்கும் கிடைக்கும் என விண்ணப்பத்தை போட்டு விட்டு காத்திருக்கிறார் மூணு நடிகை. பொறுத்திருந்து பாப்போம் என்ன நடக்கப்போகுது என்று..!

முன்னதாக, பிரபல தயாரிப்பாளருடன் நிச்சயதார்த்தம் நடந்த போது அந்த காரை மூணு நடிகைக்கு பரிசளித்தார் அந்த தயாரிப்பாளர். ஆனால், திருமணம் தடைபட்டு விட்டதால் காரை திருப்பி கொடுத்துவிட்டார் மூணு நடிகை என்பது உபரி தகவல்.

--Advertisement--
Share it with your Friends