இரண்டாவது திருமணம் செய்யப்போகும் நந்தினி சீரியல் நடிகை நித்யா ராம் - மாப்பிள்ளை இவரு தான்..!


பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் ‘நந்தினி’ சீரியலின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை நித்யா ராம். 

இந்த ‘நந்தினி’ சீரியல் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள ஆகிய பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த சீரியலை சுந்தர் .சி இயக்கி வருகிறார். குஷ்பு சுந்தர் தயாரித்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு வினோத் கவுடா என்பவரை திருமணம் செய்து கொண்ட நித்யா ராம் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்த நித்யாராம் அவரை இரண்டாவத திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். 

டிசம்பர் 5-ம் தேதி அவரது இரண்டாவது திருமணம் நடக்கவுள்ளது. திருமண ஏற்பாடுகளை அவரது தங்கை ரச்சிதா ராம் கவனித்துக்கொண்டிருக்கிறார்.

--Advertisement--
Share it with your Friends