எங்க தலக்கி எவ்ளோ தில்லு பாத்தியா..!? - "குஷி" பட கதையை விஜயிடம் கூறிவிட்டு எஸ்.ஜே.சூரியா பார்த்த வேலை.!


இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகை ஜோதிகா ஹீரோயினாக நடித்த படம் குஷி. கடந்த 2000-ம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

குறிப்பாக, இளவட்டங்களை இந்த படம் மிகவும்கவர்ந்தது. இந்த படத்தில் இடம் பெற்ற கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடல் இன்றளவும் இளசுகள் பேவரைட் தான். இப்படி இந்த படத்தை பற்றிகூறிக்கொண்டே போகலாம். 


ஆனால், இந்த படத்தின் கதையை விஜயிடம் கூறிவிட்டு எஸ்.ஜே.சூரியா செய்த படு பயங்கரமான வேலையை பற்றி தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம். 


படத்தின் கதையை விஜயிடம் கூறி ஓகே வாங்கிய எஸ்.ஜே.சூர்யா பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து படத்தின் கதையை டாப் to பாட்டம் கூறிவிட்டு, இதை தான் படமாக எடுக்கப்போகிறேன் என்று அறிவித்து விட்டாராம். 

ஆனால், இந்த கதைக்கு நான் எழுதிய என்னுடைய திரைக்கதையை யாரும் வெல்ல முடியாது. என்று ஒப்பன் சேலஞ் விட்டிருக்கிறார். நல்ல வேலை அப்போது முகநூல், ட்விட்டர் என்ற ஊடகங்கள் இல்லை. சமூக வலைத்தளங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த கால கட்டத்தில் இப்படியொரு சேலஞ்சை விட்டுருந்தால் நிலைமை என்ன ஆகியிருக்கும் என்று யோசிக்க தோன்றுகின்றது.

--Advertisement--
Share it with your Friends