தொடையில் தான் அதை எழுத வேண்டுமா..? - ஷாக்ஷி அகர்வால் வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் கிண்டல்


சாக்ஷி அகர்வால் தமிழ் நடிகை ஆவார். இவர் தமிழ் மட்டும் அல்லாது மலையாள திரைப்படங்களிலும் பல துணை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் நடித்து இருக்கின்றார். 

நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தில் நடித்து 2018-ம் ஆண்டில் தமிழ் திரையுலகில் புகழ்பெற்றார். அதற்கு முன்பே பல படங்களில் சாக்ஷி நடித்து இருந்தாலும் அப்பொழுது தான் கவனிக்கப்பட்டார். 

இதனை தொடர்ந்து அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் உதவியாளரான டாக்டர் கதாபாத்திரத்தில் சாக்ஷி நடித்து இருந்தார். சமீபத்தில், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இன்னும் பிரபலமானார். 


இந்நிலையில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்பதிவிட்டுள்ளார். அதில் குட்டையான ட்ரவுசர் அணிந்தபடி தன்னுடைய தொடையழகு பளிச்சென தெரியும் படி மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கின்றார். 

மேலும், தொடையில், La vie est belle என்ற டாட்டுவும் போட்டுள்ளார். La vie est belle என்றால் ஃபிரெஞ்ச் மொழியில் "வாழ்கை மிகவும் அழகானது" என்று அர்த்தம் ஆகும்.


இதற்கு ரசிகர்கள் பலரும் இது வேற லெவல் போஸ் என கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் "வாழ்கை மிகவும் அழகானது" என்று தொடையில் எழுத வேண்டுமா..? வேறு எங்கும் எழுத இடமில்லையா..? என்று கிண்டல் கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்கள்.

--Advertisement--
Share it with your Friends