கொல மாஸ் - 2019 இந்திய அளவில் TOP 100 பிரபலங்கள் - Fobes பட்டியல் - இன்ப அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்..!


2019-ம் ஆண்டின் அதிக வருவாய் பெற்ற இந்தியப் பிரபலங்களின் டாப்-100 Forbes பட்டியலில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக முதலிடம் பெற்றுள்ளார் நடிகர் சல்மான் கான் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

இந்தியாவில் 2019-ம் ஆண்டு அதிகம் சம்பாதித்த டாப்-100 பிரபலங்களின் Forbes பட்டியலில் 252.72 கோடி ரூபாய் வருவாய் உடன் முதலிடம் பெற்றுள்ளார் கிரிக்கெட் வீரர் விராட் கோலி. 

இரண்டாம் இடத்தில் 293 கோடி ரூபாய் வருவாய் உடன் 2.0 வில்லன் அக்ஷய் குமார் உள்ளார். அடுத்து மூன்றாம் இடத்தில் 230 கோடி ரூபாய் உடன் சல்மான் கான் உள்ளார். 

டாப்-10 பட்டியலில் வழக்கம் போல் ஷாருக்கான், அமிதாப் பச்சன், ரன்வீர் சிங், எம்.எஸ்.தோணி, ஆலியா பட் ஆகியோர் உள்ளனர்.வட நாட்டு பக்கம் எல்லாம் விட்டுவிட்டு அப்படியே நம்ம தமிழ்நாட்டு பக்கம் பட்டியலை ஸ்க்ரோல் செய்தால் 13-வது இடத்தில் 100 கோடி வருவாய் பெற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்காந்துள்ளார். 95 கோடி ரூபாய் வருமானத்துடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 16-வது இடத்தை பெற்றுள்ளார்.

30 கோடி ரூபாய் வருமானத்துடன் தளபதி விஜய் 47-வது இடத்திலும். 40 கோடி ரூபாய் வருமானத்துடன் தல அஜித் 52-வது இடத்திலும் உள்ளனர்.அதனை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் 55வது இடத்திலும், நடிகர் கமல்ஹாசன் 56 வது இடைதையும் நிரப்பியுள்ளனர். 31 கோடி ரூபாய் வருமானத்துடன் நடிகர் தனுஷ் 64-வது இடத்தை தனதாக்கியுள்ளார்.

கொஞ்சம் ஷாக்கிங்காக தான் இருக்கும்... ஆம்.. நம்ம தல அஜித்தின் பேவரைட் இயக்குனர் சிறுத்தை சிவா 12 கோடி வருமானத்துடன் 80-வது இடத்தை பிடித்து டாப் 100 லிஸ்டில் முதன் முறையாக கால் அடி எடுத்து வைத்துள்ளார். இது அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியான செய்தி. அதனை தொடர்ந்து பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் 84-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆக மொத்தம், தமிழகத்தை சேர்ந்த 9 சினிமா பிரபலங்கள் இந்திய அளவிலான டாப் 100 பட்டியலில் இடம் பிடித்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். 

கடந்த வரும் 8 பேர் மட்டுமே தமிழ் சினிமாவில் இருந்து இடம் பிடித்தனர். நயன்தாரா, விஜய் சேதுபதி, சூர்யா  ஆகியோர் கடந்த வரும் Top 100 பட்டியலில் இருந்தனர். ஆனால், இந்த வருடம் Top 100 பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

கொல மாஸ் - 2019 இந்திய அளவில் TOP 100 பிரபலங்கள் - Fobes பட்டியல் - இன்ப அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்..! கொல மாஸ் - 2019 இந்திய அளவில் TOP 100 பிரபலங்கள் - Fobes பட்டியல் - இன்ப அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on December 19, 2019 Rating: 5
Powered by Blogger.