தளபதி64 இயக்குனரின் ட்வீட் - வாழ்த்தியதுடன், வைரலாக்கும் ரசிகர்கள்..!


நடிகர் விஜய்யின் தளபதி64 படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் நடந்து வருகிறது. நடிகர் விஜய் அங்கு வந்துள்ளார் என்று தெரிந்த ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக கூடுகின்றனர். 

அந்த புகைப்படங்கள், வீடியோக்களை நாம் சமூக வலைதளங்களில் பார்த்து வருகிறோம். இந்த படத்தை இயக்கி வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் கடந்த தீபாவளி அன்று வெளியான படம் "கைதி". 

வித்தியாசமான கதைக்களத்தில் கார்த்தி நடித்த இப்படம் விஜய்யின் பிகில் படத்துடன் மோதியது. ஆனாலும், 100 கோடி வசூலித்து ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. 

இன்னமும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம் 50வது நாளை எட்டியுள்ளதால் சந்தோஷத்தில் அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார் இயக்குனர் லோகேஷ். அவரின் பதிவைபார்த்த ரசிகர்கள் அவரை வாழ்த்தியதுடன் அதனை வைரலாக்கியும் வருகிரார்கள.

தளபதி64 இயக்குனரின் ட்வீட் - வாழ்த்தியதுடன், வைரலாக்கும் ரசிகர்கள்..! தளபதி64 இயக்குனரின் ட்வீட் - வாழ்த்தியதுடன், வைரலாக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on December 12, 2019 Rating: 5
Powered by Blogger.