தளபதி65 அட்லியும் இல்லை, வெற்றிமாறனும் இல்லை - இவரு தான் இயக்குனர்..? - மாஸ் அப்டேட்


நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி64 படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு பணிகள் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருகின்றன.

இது ஒருபுறமிருக்க, தளபதி65 படத்தை இயக்குனர் அட்லி இயக்கபோகிறார் என்று கூறப்பட்டது. ஆனால், அதுகுறித்து எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பும்வெளியாகவில்லை.

சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் விஜய்யை சந்தித்தார். இதனை தொடர்ந்து தளபதி65 படத்தை வெற்றி மாறன் தான் இயக்கபோகிறார் என்று கூறினார்கள். 

ஆனால், தற்போது விஜய்யின் அடுத்தபடத்தை இயக்கும் வாய்ப்பு அட்லிக்கும் இல்லை, வெற்றி மாறனுக்கும் இல்லை என்று நம்ப தகுந்த வட்டரங்களிடமிருந்து தகவல்கள் வந்துள்ளன.

ஆம், நடிகர் விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலேயே நடிக்கவுள்ளார். ஆனால், அது தளபதி65 படமா..? அல்லது தளபதி66 படமா.? என்று இன்னும் உறுதியாகவில்லை. 

தற்போது, தளபதி64 படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை விஜய்யின் அடுத்தபடம் குறித்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகாது என்று விஜய்க்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனர்.
Advertisement
Share it with your Friends