நிஜமாவே உங்களுக்கு பெரிய மனசு தான் - பணம் கொடுத்த தயாரிப்பாளர் - வாங்க மறுத்து சாய்பல்லவி..!


நடிகை சாய் பல்லவி 'மாரி 2' படத்தில் தனுஷுடன் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் வெளியான ரவுடி பேபி பாடல் சூப்பர் ஹிட் ஆனது. 

இதற்கு முன்னதாக பிரேமம் படத்தின் மூலம் இவரது நடிப்பு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது, தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் இவர் ‘பிரேமம்’ என்ற மலையாள படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். 

இந்த திரைப்படத்தில் நட்பு, காதல் பற்றி மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.தொடர்ந்து நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வந்த சாய்பல்லவிக்கு சமீபத்தில் நடித்த படங்கள் எதுவும் சரியாக வரவேற்பை பெறவில்லை.

அந்த வகையில், கடந்த வருடம் வெளியான "Padi Padi Leche Manasu" என்ற தெலுங்கு படம் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த படத்தினால் தயாரிப்பாளர் மிக மோசமாக பாதிக்கபட்டார். இதனால், சாய்பல்லவி உள்ளிட்ட பிரபல நடிகர்களுக்கு சம்பள பாக்கி நிலுவையில் இருந்தது.

இதனை தொடர்ந்து, இப்போது அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சுதாகர் நடிகர் சாய்பல்லவிக்கு கொடுக்க வேண்டிய 40 லட்ச ரூபாய் பாக்கியை தற்போது கொடுக்க முன் வந்துள்ளார்.

ஆனால், படம் தோல்வியடைந்து கடனில் சிக்கி இருக்கும் தயாரிப்பாளரின் நிலை அறிந்தவராக நடிகை சாய்பல்லவி 40 லட்ச ரூபாயை வாங்க மறுத்துவிட்டார். 

இதனை தொடர்ந்து, அவரது பெற்றோரை தொடர்புகொண்ட பாக்கி பணத்தை கொடுக்க முயன்றுள்ளார் தயாரிப்பளர் சுதாகர். ஆனால், அவர்களும் சாய்பல்லவி கூறிய பதிலையே கூறியுள்ளனர்.

இந்த காலத்துல இப்படி ஒரு நடிகையா..? நிஜமாவே உங்களுக்கு பெரிய மனசு தான் மேடம்..!

நிஜமாவே உங்களுக்கு பெரிய மனசு தான் - பணம் கொடுத்த தயாரிப்பாளர் - வாங்க மறுத்து சாய்பல்லவி..! நிஜமாவே உங்களுக்கு பெரிய மனசு தான் - பணம் கொடுத்த தயாரிப்பாளர் - வாங்க மறுத்து சாய்பல்லவி..! Reviewed by Tamizhakam on December 06, 2019 Rating: 5
Powered by Blogger.