அதுக்குதான் இந்த பில்டப்பா..? - மாஸ் ஹீரோவின் அட்ராசிட்டிக்கு காரணம் இது தானாம்..!


மாஸ் ஹீரோ தற்போது ப்ரிஷனர் படத்தின் இயக்குனருடன் கை கோர்த்து தன்னுடைய அடுத்த படத்தில் நடித்து வருகிறார். பக்கத்து ஸ்டேட்டில் அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. 

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தினமும் ரசிகர்களை சந்தித்து தான் தங்கியிருக்கும் ஹோட்டலை திருவிழா கோலம் செய்து வருகிறார் மாஸ் ஹீரோ. எங்கு படப்பிடிப்புக்கு போனாலும் ஆள் எங்கிருக்கிறார்.. எந்த ஹோட்டலில் இருக்கிறார் என்று கூட யாருக்கும் தெரியாது.

அவ்வளவு ஏன், இதே படத்தின் ஷூட்டிங் இந்திய தலைநகரில் நடைபெற்ற போது அடக்கி வாசித்தார் நடிகர். ஆனால், இப்போது இந்த கலவரம் பண்ணிக்கிட்டு இருக்காரே என்ன காரணமாம் என்று விசாரித்த போது கிடைத்த தகவல்களை அப்படியே இங்கு கொட்டியிருகிறோம்.

ஆம், சமீபத்தில் பள்ளி நிர்வாகம் ஒன்று மாஸ் ஹீரோ மற்றும் அவரது படக்குழுவினர் மீது கடுமையான புகார் ஒன்றை கூறியிருந்தது. அந்த விஷயம், சமூக வலைதளங்களில் விஸ்வரூபம் எடுக்கவே அதனை, மறைக்க தான் இந்த ரசிகர்கள் சந்திப்பு ஸ்டன்ட் நடக்கிறதாம்.

அதிலும், ஹோட்டலில் சென்று மாஸ் ஹீரோவை பார்க்கும் முக்கால்வாசி பேசி அந்த ஊர் காரர்களே இல்லையாம். சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தன்னுடைய மன்ற நிர்வாகிகள் மூலம் முன்கூட்டியே அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைத்து இண்டைரக்ட் அப்பாயின்ட்மென்ட் முறையில் அவர்களை ஹோட்டல் வாசலில் சந்தித்து கையசைத்து விட்டு போகிறாராம் மாஸ் ஹீரோ. 

இதற்காக, தினமும் 60 முதல் 80 ரசிகர்கள் பக்கத்துக்கு ஸ்டேட்டிற்கு செல்கிறார்கள். அவர்களுக்கு தங்குவதற்கு அறை மற்றும் உணவு திரும்பி வரும் செலவு ஆகியவற்றை தன்னுடைய மன்ற நிர்வாகிகள் மூலம் சொந்த பணத்தில் செலவு செய்கிறாராம் மாஸ் ஹீரோ..! இதனை அறிந்த கோடம்பாக்கத்தினர் இதுக்கு தான் இவ்வளவு பில்டப்பா என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிரார்கள்.

அதுக்குதான் இந்த பில்டப்பா..? - மாஸ் ஹீரோவின் அட்ராசிட்டிக்கு காரணம் இது தானாம்..! அதுக்குதான் இந்த பில்டப்பா..? - மாஸ் ஹீரோவின் அட்ராசிட்டிக்கு காரணம் இது தானாம்..! Reviewed by Tamizhakam on December 19, 2019 Rating: 5
Powered by Blogger.