"சூப்பர் சிங்கர்" வின்னர் திவாகருக்கு திருமணம் - பிரபலங்கள் கொடுத்த பரிசை பாருங்க..!


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான "சூப்பர் சிங்கர்" என்ற குரல் தேடலுக்கான நிகழ்ச்சி பற்றி சினிமா ரசிகர்கள் பலருக்கும் தெரியும். இந்நிகழ்ச்சி மூலம் தங்களது பாடல் திறமையை வெளிக்காட்டி சினிமாவில் சாதித்தவர்கள், சாதித்துகொண்டிருப்பவர்கள் பலர். 

அந்த வகையில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்றே சூப்பர் சிங்கர் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாதனை செய்து இப்போது அதிக படங்கள், இசைக் கச்சேரி என பாடி வருகிறார் பாடகர்திவாகர். 

இவருக்கும், அபி என்ற பெண்ணுக்கும் அண்மையில் திருமணம் நடந்தது. இவர்களது திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாடகர் அந்தோணி தாஸ் அவர்களுக்கு ஒரு கூடை வெங்காயத்தை பரிசாக கொடுத்துள்ளார். 


அதேபோல் அமுதவாணன், ஆதவன் ஆகியோர் இந்த திருமண ஜோடிக்கு கொசு பேட்டை பரிசு கொடுத்துள்ளனர். இவர்களது இந்த பரிசை பார்த்தவர்கள் குலுங்கி குலுங்கி சிரித்துள்ளனர்.


"சூப்பர் சிங்கர்" வின்னர் திவாகருக்கு திருமணம் - பிரபலங்கள் கொடுத்த பரிசை பாருங்க..! "சூப்பர் சிங்கர்" வின்னர் திவாகருக்கு திருமணம் - பிரபலங்கள் கொடுத்த பரிசை பாருங்க..! Reviewed by Tamizhakam on December 12, 2019 Rating: 5
Powered by Blogger.