இந்த காதலும் பறிபோயிடுமா..? - விரக்தியில் கோயில் கோயிலாக சுற்றும் நடிகை..!


உச்ச நடிகை ஒருவர் பல காதல் தோல்விகளுக்கு பிறகு இளம் இயக்குனர்ஒருவரை காதலித்து வருகிறார். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே வயது தான். கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்து வருகிறார்கள். 

நடிகை ஏற்கனவே இரண்டு காதலில் தோற்றவர். வம்பு நடிகரை முதன் முதலில் காதலித்தார். ஆனால், அவரை ப்ரேக் அப் செய்து விட்டு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். 

பிறகு, நடனநடிகர் ஒருவரை காதலித்தார். அவருக்கு கோடி கோடியாக பணத்தை அள்ளிகொடுத்தார் அம்மணி. அந்த நடிகரும் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு நடிகை பின்னால் சுற்றி திரிந்தார். ஆனால், விதி இருவரையும் சேர்த்து வைக்கவில்லை. மாறாக, நடிகைக்கு கோடிகளில் நஷ்டம் ஆனது தான் மிச்சம். 

இப்போது, இயக்குனரை காதலித்து வருகிறார். இவருக்கும் கோடிகளில் தான் செலவு செய்து கொண்டிருக்கிறார். ஆனால், இயக்குனரோ குடி போதையில் நண்பர்களிடம் நடிகையை பற்றி அவதூறாக பல விஷயங்களை பேசியுள்ளார். இது நடிகையின் காதுக்கு எட்டவே, இந்த காதலும் பறிபோயிடுமோ என்ற கவலையில் உள்ளாராம். 

சரி, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தால் சினிமா வாய்ப்பு போய்விடுமோ என பயப்படுகிறாராம். திருமணத்தை தாமதப்படுத்துவது தான் நடிகையின் காதல் இயக்குனரை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது என்கிறார்கள். 

இதனால் தான் நடிகையை பற்றி நண்பர்களுடன் புலம்ப போய் அது அம்மணியின் காதலுக்கு ஆப்பு வைக்கும் விதமாக வந்து நிற்கிறது. இதனால், காதலனை கூட்டிக்கொண்டு கோயில் கோயிலாக சுற்றி வருகிறாராம். அநேகமாக, விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகும் என கூறுகிறார்கள்.

இந்த காதலும் பறிபோயிடுமா..? - விரக்தியில் கோயில் கோயிலாக சுற்றும் நடிகை..! இந்த காதலும் பறிபோயிடுமா..? - விரக்தியில் கோயில் கோயிலாக சுற்றும் நடிகை..! Reviewed by Tamizhakam on December 15, 2019 Rating: 5
Powered by Blogger.