நடிகர் விஜய் மீது இருந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!


நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் இரண்டாவதாக வந்த படம் "கத்தி". கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த இப்படம் விவசாயிகளின் கஷ்டத்தை பற்றி பேசியது. 

வழக்கம் போல விஜய் படங்களுக்கு ஏற்படுவது போல இந்த படத்தை சுற்றியும் பல சர்ச்சைகளும் படம் ரிலீஸின் போது இருந்தது. அதில் பெரிய பிரச்னை என்னவென்றால் இது என்னுடைய கதை என்று உதவி இயக்குனர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 

தற்போது இந்த வழக்கிற்கு மதுரை கிளை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், இந்த வழக்கில் இருந்து நடிகர் விஜய், இயக்குனர் முருகதாஸ் மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோர் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 

இந்த தீர்ப்பு படம் வெளியாகி 5 வருடத்திற்கு பிறகு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் மீது இருந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..! நடிகர் விஜய் மீது இருந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..! Reviewed by Tamizhakam on December 10, 2019 Rating: 5
Powered by Blogger.