உச்ச நடிகரின் உக்கிரமான திட்டம் - கிடுகிடுத்து கிடக்கும் கோடம்பாக்கம் - வேற லெவல் வெறித்தனம்..!


உச்ச நடிகர் ஒருவர் அரசியலுக்கு வருவேன்.. வரேன்.. வந்துட்டு இருக்கேன்.. வந்துடுவேன்.. என்று கடந்த பல வருடமாக உர்ரி காட்டிக்கொண்டிருக்கிறார். இறுதியாக, அடுத்த வருடம் தமிழ்ப்புத்தாண்டு அன்று புதிய கட்சியை தொடங்கவுள்ளார் என்று கூறுகிறார்கள்.

2021-ல் ஆட்சியை பிடிக்க வேண்டும் என முனைப்புடன் இருக்கும் இவர் வெளியில் சாதரனமாக சுற்றிக்கொண்டு உள்ளுக்குள் உக்கிரமான பல ப்ளான்-களை போட்டு வருகிறாராம்.

அதில் ஒன்று, கூட்டணி யார் யாருடன் என்பது தானாம். ஆம், தனியாக களம் இறங்கப்போவதில்லை என்பதில் நடிகர் திட்டவட்டமாக உள்ளார். வாக்குகள் பிரித்து உளறல் கட்சி ஆட்சியை பிடிக்க நாம் வழி வகுத்துவிட கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறாராம்.

இதெல்லாம் அரசியல், அந்த பக்கம் நமக்கு வேலை இல்லை. சினிமாவில் என்ன உக்கிரமான திட்டம் என்று நமக்கு கிடைத்த தகவலின் படி மூன்று படங்களை முடித்து விட்டு அவற்றை தேர்தல் நேரத்தில் குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து ரிலீஸ் செய்வது என்ற வெறித்தனமான திட்டத்தில் இருகிறாராம். 

இதனால், ரசிகர்களை ஆக்டிவாக வைத்திருக்க முடியும் என நம்புகிறாராம். இதற்காக, சமீபத்தில் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர்களை வீட்டிற்கே அழைத்து கதை கேட்டு வருகிறாராம். சமீபத்தில், லேட்டஸ்ட் சென்சேஷன் இயக்குனர் ஒருவர் சந்தித்துவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் நிற்க வேண்டும், நாட்டை ஆண்டே ஆக வேண்டும் என்று இவரது ஜாதகம் கூறினாலும், ஆன்மீகத்தில் பெரியவர்கள் கூறும் சிலவற்றை தவறாமல் கடைபிடித்து வருகிறார். அடுத்தடுத்து மூன்று படம் ரிலீஸ் ஐடியா கூட அவர்களிடம் இருந்து தான் வந்துள்ளது என்று கூறுகிறார்கள்.   

இவ்வளவு ப்ளான்களையும் வைத்துக்கொண்டு, அதிசயம், அற்புதம் நிகழுமா..? என்று தன்னுடைய நலம் விரும்பிகள் யாரவது கேட்டால்  நம்மகையில இல்ல..ஆண்டவன் என்ன முடிவு பண்ணி வச்சிஇருக்கான்னு யாருக்கு தெரியும் என சிரித்தபடியே வானத்தை நோக்கி கையை காட்டுகிறாராம் உச்சம்.

உச்ச நடிகரின் உக்கிரமான திட்டம் - கிடுகிடுத்து கிடக்கும் கோடம்பாக்கம் - வேற லெவல் வெறித்தனம்..! உச்ச நடிகரின் உக்கிரமான திட்டம் - கிடுகிடுத்து கிடக்கும் கோடம்பாக்கம் - வேற லெவல் வெறித்தனம்..! Reviewed by Tamizhakam on December 17, 2019 Rating: 5
Powered by Blogger.