போதையில் புலம்பி வசமாக சிக்கிக்கொண்ட இயக்குனர்..! - பிடி கொடுக்காத காதலி - உச் கொட்டும் கோடம்பாக்கம்..!


தென்னிந்திய சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நடிகையாக இருந்து வரும் அந்த நடிகைக்கும் இளம் இயக்குனர் ஒருவரும் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம்.

ஆனால், எத்தனை நாளைக்கு தான் காதலர்களாக இருப்பது. திருமணம், குழந்தை குட்டி என செட்டில் ஆக வேண்டாமா என்ற எண்ணத்தில் இருகிறாராம் இயக்குனர். ஆனால், நடிகைக்கு திருமணம் என்ற எண்ணமே இல்லையாம்.

திருமணம் குறித்து பல முறை கேட்டும் இந்த வருஷம், அடுத்த வருஷம் என பிடி கொடுக்காமல் இழுத்தடித்துக்கொண்டே இருக்கிறாராம் நடிகை. இது இயக்குனருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் நடிகையின் மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறுகிறார்கள்.

சமீபத்தில், இந்த விவகாரம் குறித்து போதையில் இருக்கும் போது தனது நண்பர்களிடம் நடிகை பற்றி எக்குதப்பாக உளறிவைத்துவிட்டார் இயக்குனர். இப்போது, இந்த விஷயம் நடிகையின் காதுக்கு போக விஷயம் விவகாரம் ஆகிவிட்டதாம்.

இந்த காதல் நிச்சயம் திருமணத்தில் முடியும் என்று நம்பியிருந்த கோடம்பாக்கத்தில் உள்ள நடிகையின் நலம் விரும்பிகள் உச் கொட்டி வருகிறார்கள்.

போதையில் புலம்பி வசமாக சிக்கிக்கொண்ட இயக்குனர்..! - பிடி கொடுக்காத காதலி - உச் கொட்டும் கோடம்பாக்கம்..! போதையில் புலம்பி வசமாக சிக்கிக்கொண்ட இயக்குனர்..! - பிடி கொடுக்காத காதலி - உச் கொட்டும் கோடம்பாக்கம்..! Reviewed by Tamizhakam on December 10, 2019 Rating: 5
Powered by Blogger.