பிரபலத்தின் மீது அசுரன் பட நடிகை பகீர் குற்றசாட்டு - இயக்குனரை கைது செய்த போலீஸ்..!


தனுஷ் நடித்த அசுரன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சு வாரியர். இவருக்கு இதற்க முன்பே பல தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வர சில காரணங்களால் தள்ளிப்போயுள்ளது. 

இவர் மலையாள சினிமாவின் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான V.A.ஸ்ரீகுமார் என்பவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரில் அவர் கூறியுள்ளதாவது, சமூக வலைதளங்களில் தனது புகழுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வண்ணம் இயக்குனர் V.A.ஸ்ரீகுமார் ஏற்படுத்தி வருகிறார்.

மேலும், அவரால் தனது உயிருக்கும் ஆபத்து இருக்கிறது என்று அதில் குறிப்பிட்டிருந்தார். 

அந்த புகார் அடிப்படையில் திரிசூர் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபலத்தின் மீது அசுரன் பட நடிகை பகீர் குற்றசாட்டு - இயக்குனரை கைது செய்த போலீஸ்..! பிரபலத்தின் மீது அசுரன் பட நடிகை பகீர் குற்றசாட்டு - இயக்குனரை கைது செய்த போலீஸ்..! Reviewed by Tamizhakam on December 07, 2019 Rating: 5
Powered by Blogger.