தன் பெயரை கூகுள் செய்தாலே சர்ச்சை தான் - பெயரையே மாற்றிக்கொண்ட நடிகை அதிதி மேனன்


"பட்டதாரி" என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக மூலம் அறிமுகமானவர் கேரளாவை சேர்ந்த அதிதி மேனன். அதைத்தொடர்ந்து அட்டகத்தி தினேஷ் ஜோடியாக "களவாணி மாப்பிள்ளை" என்ற படத்தில் நடித்தார். 

ஆனால், நெடுநல்வாடை திரைப்படத்தின் இயக்குனர் மீது சர்ச்சை குற்றச்சாட்டு சுமத்தியது மற்றும் தனது காதல் கணவர் நடிகர் அபி சரவணன் மீது புகார் கூறியது என தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களில் சிக்கிய அதிதி மேனனுக்கு தமிழில் படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. 

இந்நிலையில், தனது தாய் மொழியான மலையாளத்தில் அவருக்கு ஜாக்பாட் அடித்தது போல தற்போது மோகன்லாலுக்கு ஜோடியாக சித்திக் டைரக்ஷனில் பிக் பிரதர் என்கிற படத்தில் நடித்து வருகிறார் அதிதி மேனன். 

அதிதி மேனன் என்று கூகுள் செய்தாலே அம்மணியின் சர்சையான விஷயங்கள் தான் பிரதானமாக தென்படுகின்றன. இதனால, இந்தப்படத்தில் இருந்து மலையாளத்தில் தனது பெயரை மிர்னா என மாற்றி வைத்துக் கொண்டு நடித்து வருகிறாராம் அதிதி மேனன்.

தன் பெயரை கூகுள் செய்தாலே சர்ச்சை தான் - பெயரையே மாற்றிக்கொண்ட நடிகை அதிதி மேனன் தன் பெயரை கூகுள் செய்தாலே சர்ச்சை தான் - பெயரையே மாற்றிக்கொண்ட நடிகை அதிதி மேனன் Reviewed by Tamizhakam on December 07, 2019 Rating: 5
Powered by Blogger.