"என் இறுதி மூச்சு உள்ள வரை இருக்கும் அந்த வலியை கொடுத்ததற்கு நன்றி " - கணவர் குறித்து சுரேகா வாணி வேதனை..!


தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருபவா் சுரேக்கா வாணி. தமிழில் விஜய்யின் மெர்சல், அஜித்தின் விஸ்வாசம், தனுஷின் உத்தமபுத்திரன், தெய்வ திருமகள், எதிர் நீச்சல், ஜில்லா, உதயம் NH4 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளாா். 

தொடர்ந்து தெலுங்கில் துபாய் சீனு, ஸ்ரீமந்தடு, நில டிக்கெட் போன்ற படங்களிலும் நடித்துள்ளாா் தெலுங்கு திரையுலகில் பிரபலமான சுரேஷ் தேஜாவை காதலித்து திருணம் செய்து கொண்டாா். சுரேஷ் தேஜா, தெலுங்கில் மா டாக்கீஸ், ஹார்ட்பீட், மொகுட்ஸ் பெல்லம்ஸ் உள்ளிட்ட பல டிவி நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த மே மாதம் இருதய அடைப்பு காரணமாக சுரேஷ்தேஜா உயிரிழந்தார். இது சின்னத்திரை வட்டாரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இன்று, இவர்களது திருமண நாள். 


இதனை நினைவு கூர்ந்துள்ள சுரேகா வாணி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், " நம்முடைய வாழ்கை பயணம் தொடங்கி 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இப்போது நீங்கள் என்னுடன் இல்லை. என் இறுதி மூச்சு உள்ள வரை இருக்கும் அந்த வலியை கொடுத்ததற்கு நன்றி. சமூகமும், மக்களும் இன்று என்னென்னவோ  பேசுகிறார்கள்..!


ஆனால், நான் என்னென்ன விஷயங்களை எதிர்கொண்டிருக்கிறேன் என்று எனக்கு தான் தெரியும். இதயத்தாலும், ஆமாவலும் நல்ல இதயம் கொண்டவர் நீங்கள். எனக்கு அதிகமான பலத்தை கொடுங்கள்.! " என்று உருக்கமாக பதிவிட்டு தன்னுடைய கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Advertisement
Share it with your Friends