கதை கூறிய அசுரத்தனமான இயக்குனர் - கும்புடு போட்டு அனுப்பிவிட்ட டாப்பு-டக்கரு நடிகர்..!


தமிழ் சினிமாவின் அசுரத்தனமான இயக்குனர் அவர். அவருடைய சமீபத்திய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றன. சமீபத்தில், அவரது இயக்கத்தில் வெளியான படம் ஒன்று அசுரத்தனமான வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து, டாப்பு-டக்கரு நடிகரை சந்தித்து கதை கூற சென்றார் அந்த இயக்குனர். கதையை பொறுமையாக கேட்ட டாப்பு-டக்கரு நடிகர் வேண்டாம்பா சாமி என கும்புடு போட்டு அனுப்பி விட்டராம்.

இதனை, அந்த இயக்குனரே சமீபத்திய ஒரு பேட்டியில் போட்டு உடைத்து விட்டார். என்ன காரணம், ஒரு ஹிட் படம் கொடுத்திருந்தால் கூட லீடர் நடிகர் அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பாரே..? இவர் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் இவருக்கு ஏன் வாய்ப்பில்லை என்று டாப்பு-டக்கருக்கு நெருங்கிய வட்டாரங்களிடம் விசாரித்தோம்.

அந்த இயக்குனர் கூறிய கதை, சமூக பிரச்னைகள பேசாமல் சாதி பிரச்னைகளை பற்றி பேசியதால் இந்த விவகாரத்திற்குள் நான் வரவில்லை. சும்மாவே என்னுடைய படங்களுக்கு பிரச்சனை வரும். இந்த நிலைமையில, இதெல்லாம் எனக்கு செட் ஆகாதுங்னா என்று தெளிவாக எடுத்து கூறி அனுப்பியுள்ளார் டாப்பு-டக்கரு என்ற தகவல் கிடைத்துள்ளது.

சமூக பிரச்சனை பேசும் படம் என்றால் கண்டிப்பாக நடிக்கிறேன். சாதி பிரச்னைகள் பத்தி பேசுற படம் எனக்கு வேண்டாம் என்பதில் மிகத்தெளிவாக இருக்கிறார் டாப்பு-டக்கரு. 

ஆம், ஏற்கனவே, உச்ச நடிகரை வைத்து இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் இதே போல ஒரு கதையை கூறிய போது உச்ச நடிகரை இயக்கிய இயக்குனர் என்று கூட பார்க்காமல் ஸ்ட்ரிக்ட்டாக நோ சொல்லியனுப்பினார் டாப்பு-டக்கரு என்பது உபரி தகவல்.

நெசமாவே.. நீங்க டாப்பு-டக்கருதான்ங்கனா..!

கதை கூறிய அசுரத்தனமான இயக்குனர் - கும்புடு போட்டு அனுப்பிவிட்ட டாப்பு-டக்கரு நடிகர்..! கதை கூறிய அசுரத்தனமான இயக்குனர் - கும்புடு போட்டு அனுப்பிவிட்ட டாப்பு-டக்கரு நடிகர்..! Reviewed by Tamizhakam on December 18, 2019 Rating: 5
Powered by Blogger.