லாட்ஜில் நடிகையுடன் உல்லாசம் - வருவாய் துறை அதிகாரியை ஜட்டியோடு தவிக்க விட்டு எஸ்கேப் ஆன நடிகை..!


சென்னையை சேர்ந்த ஒய்வு பெற்ற வருவாய் துறை அதிகாரி ஒருவர், கடந்த ஞாயிற்று கிழமை இரவு பாலியல் தொழில் செய்யும் பெண் ஒருவரை அழைத்து சென்று கோயம்பேடு தனியார் விடுதியில் உல்லாசமாக இருந்துள்ளார். 

அந்த பெண்   சினிமா துணை நடிகையாக வேலை செய்து வருகிறார் என்று கூறுகிறார்கள். இரவு முழுதும் நடிகையுடன் உல்லாசமாக இருந்த அந்த அதிகாரி காலை எழுந்து பார்க்கும் போது அதிர்ந்து போனார்.

ஆம், அந்த நடிகை ஒய்வு பெற்ற வருவாய்துறை அதிகாரியின் உள்ளாடையை மட்டும் விடுத்து மீதமுள்ள அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு ஜூட் விட்டுவிட்டார்.

அவருடைய 5 சவரன் செயின், 3 தங்க மோதிரம் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை அந்த நடிகை திருடிச்சென்றுள்ளார். உடுத்துக்கொண்டிருந்த பேன்ட் சர்ட்டையும் அந்த நடிகை விட்டு வைக்கவில்லை.

வெளியே செல்வதற்கு துணி கிடைக்காமல் தவித்த அதிகாரி, விடுதியில் பணியாற்ரும் ரூம் பாய் மூலம் புதிதாக துணி வாங்கி கொண்டு, கிண்டியில் தெரிந்த காவலரை அணுகியுள்ளார். 

இந்த சம்பவம் கோயம்பேட்டில் நடந்ததால், அப்பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்க அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக போலிசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகின்றனர். இதில் கொடுமை என்னவென்றால் ஏற்கனவே இது போல சில சபலிஸ்ட் ஆண்கள் இதே போன்ற பெண்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான்.

லாட்ஜில் நடிகையுடன் உல்லாசம் - வருவாய் துறை அதிகாரியை ஜட்டியோடு தவிக்க விட்டு எஸ்கேப் ஆன நடிகை..! லாட்ஜில் நடிகையுடன் உல்லாசம் - வருவாய் துறை அதிகாரியை ஜட்டியோடு தவிக்க விட்டு எஸ்கேப் ஆன நடிகை..! Reviewed by Tamizhakam on December 07, 2019 Rating: 5
Powered by Blogger.