பிகில் படம் ஹிட் இல்லை - ஆனால், விஜய் தான் நம்பர் 1, அஜித் நம்பர் 2, அதற்கு அப்புறம் தான் ரஜினி - சொன்னது யாருன்னு பாருங்க..!


கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் நடிகர் விஜயின் "பிகில்" திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் மிக அதிக அளவில் வசூல் செய்தது. 

பிகில் படத்தின் வசூல் குறித்து பல விநியோகஸ்தர்கள் இதற்கு முன்பே பேட்டி அளித்திருக்கிறார்கள். அதில் பலரும் கூறியிருந்த ஒரே விஷயம், அதிகபட்சமாக 70 முதல் 90 கோடியில் எடுக்க வேண்டிய பிகில் படத்தை பிரமாண்டம் என்ற பெயரில் 180 கோடி ரூபாய் போட்டு எடுத்தது தான் பிகில் படத்தின் லாபத்தை குறைத்து விட்டது. 

படம் நஷ்டம் இல்லை என்றாலும் பட்ஜெட்டை குறைத்திருந்தால் லாபம் அதிகரித்திருக்கும் என்று கூறினார்கள். இயக்குனர் அட்லி மீது பட்ஜெட்டை இழுத்து விடுகிறார் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து கொண்டு தான் வருகின்றது. மெர்சல் படத்தின் போதே இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டது குறிபிடத்தக்கது. 


இந்நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் கேயார் அளித்துள்ள பேட்டியில் "ரஜினி படத்தை விட விஜய் படத்திற்கு தான் அதிகம் மார்க்கெட் இருக்கிறது. பிகில் படம் ஹிட் இல்லை. எவறரேஜ் தான். ஆனாலும், விஜய் படம் என்பதால் மட்டுமே பெரிய அளவுக்கு வசூல் செய்கிறது. 

ஆனால், படம் சூப்பராக இருந்தால் வசூல் எப்படி இருக்கும் என யோசித்து பாருங்கள். விஸ்வாசம்-பேட்ட ஒன்றாக வந்தாலும் மக்கள் அதிக விடுமுறை என்பதால் அந்த இரண்டு படங்களையும் பார்த்தார்கள். 

அதில், அஜித் படம் சற்றே அதிகமாக வசூல் செய்தது. ஆனால், விஜய் தான் முதலிடம், அவருக்கு அடுத்து தான் அஜித். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மூன்றாவது இடம்தான் என கூறியுள்ளார் தயாரிப்பாளர் கேயார்.

பிகில் படம் ஹிட் இல்லை - ஆனால், விஜய் தான் நம்பர் 1, அஜித் நம்பர் 2, அதற்கு அப்புறம் தான் ரஜினி - சொன்னது யாருன்னு பாருங்க..! பிகில் படம் ஹிட் இல்லை - ஆனால், விஜய் தான் நம்பர் 1, அஜித் நம்பர் 2, அதற்கு அப்புறம் தான் ரஜினி - சொன்னது யாருன்னு பாருங்க..! Reviewed by Tamizhakam on January 11, 2020 Rating: 5
Powered by Blogger.