10 பேர் சிக்குகிறார்கள் - கஸ்தூரி - அஜித் ரசிகர்கள் விவகாரம் - கோர்ட் அதிரடி உத்தரவு..!


நடிகை கஸ்தூரி என்றாலே சர்ச்சை தான் என்றாகி விட்டது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை இது போன்ற ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி விடுகிறார். அந்த வகையில், தற்போது இவர் சிக்கியிருப்பது அஜித் ரசிகர்கள் குறித்த சர்ச்சை. 

அஜித்தின் புகைப்படத்தை Dp-யாக கொண்ட நெட்டிசன் ஒருவர் தன்னை பற்றி தகாத வார்த்தைகளில் பதிவிட அதற்கு பதில் கொடுக்க போய் விஷயம் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் அளவுக்கு சென்று விட்டது. 

அந்த விவகாரத்தில் தன்னை பற்றி தகாத முறையில் விமர்சித்த நபர்களை பற்றி ட்விட்டரில் கோபத்துடன் பதிவிட்டார். மேலும், அஜித் ரசிகர்கள் பற்றி அவர் பதிவிட்ட ஹாஸ் டேக் சர்ச்சையானது. 

இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனதை தொடர்ந்து இந்த சர்ச்சை பற்றி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சமூக வலைதளங்களில் தாகத முறையில் கருத்துக்களை பதிவு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சைபர் க்ரைம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம். 

இதன் காரணமாக, ஆபாசமாக பதிவிட்ட அந்த 10 நபர்கள் பற்றிய விவரங்களை இன்று தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் கஸ்தூரி பற்றி பேசிய நபர்கள் நிச்சயம் சிக்குவார்கள் என கூறப்படுகின்றது.
Advertisement

Share it with your Friends