"நாங்க எல்லாம் அப்பவே அப்படி..! " 10 வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட திரிஷா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!


நடிகை த்ரிஷா ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஒரு சில காட்சிகளில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அப்போதிலிருந்து, கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கி வருகிறார். 

தற்போதும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். 

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள இளம் வயது புகைப்படம் ஒன்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

இப்போது, நாய்கள் மீது அதிக பாசம் வைக்கிறார். ஆனால், நான் அப்பவே அப்படித்தான் என கூறும் வகையில் சிறுவயதிலே த்ரிஷா சிறு வயதிலேயே நாயுடன் எடுத்த போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 1993-ல் அவரது முதல் நாய் குட்டி உடன் போஸ் கொடுத்தது பற்றி அவர் உருக்கமாக அவர் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, "உலகத்தில் இருக்கும் எல்லாவற்றை விடவும் நான்கு கால் குழந்தைகளை தான் நான் காதலிக்கிறேன் என 1993-ம் ஆண்டு தான் உணர்ந்தேன்" என கூறியுள்ளார். நாய்கள் மீது திரிஷா கொண்டுள்ள அதீத பற்றை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து வருகிறார்கள்.


Advertisement

Share it with your Friends