1971-ம் ஆண்டு பொதுவெளியில் நடந்த வக்கிரம் - வைரலாக்கும் ரஜினி ரசிகர்கள்..! - கொதிக்கும் இந்துக்கள்..!


நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் "துக்ளக்" விழா மேடையில் அந்த பத்திரிகையின் பெருமைகளை பற்றி பேசினார். 

அதில் குறிப்பிடும்படியான விஷயம் என்னவென்றால், கடந்த 1971-ம் ஆண்டு சேலத்தில் ஈ.வே.ராமசாமி தலைமையில் அப்போதைய ஆளும் கட்சியான திமுக ஆதரவுடன் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் ஒரு பேரணி நடந்ததாக கூறினார்.

அந்த பேரணியில் இந்துக்கடவுளான ராமர் மற்றும் சீதையை ஆடையின்றியும் செருப்பு மாலை அணிவித்தும் சிவன் மற்றும் பார்வதியை ஆடையின்றியும் செருப்பு மாலை அணிவித்தும் இழிவு படுத்திய  அந்த விஷயத்தை அப்போது தமிழகத்தில் இருந்த எந்த பத்திரிகையும் பிரசுரிக்கவில்லை, ஆனால், சோ நடத்திய துக்ளக் பத்திரிக்கையில் அட்டைப்படமாக போட்டு எதிர்ப்பு தெரிவித்தார் என ரஜினி கூறியிருந்தார். 

இந்த பேச்சை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஈ.வே.ராமாசாமியை இழிவு படுத்தி விட்டார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல தரப்பட்ட அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். 

இந்நிலையில், ரஜினிகாந்தின் ரசிகர்கள் 1971-ம் ஆண்டு வெளியான துக்ளக் பத்திரிக்கையின் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். அதில், ரஜினிகாந்த் சொன்னது போல அத்தனையும் நடந்துள்ளது உண்மைதான் என தெரிய வந்துள்ளது. 

இது இந்து மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில், இரத்தத்தை உறைய வைக்கும் கொடுமை என்னவென்றால் 2020-ம் ஆண்டு இப்போது கூட  இந்த விஷயத்தை பற்றி பேசவோ, விவாதிக்கவோ எந்த ஊடகமும் முன்வரவில்லை என்பது தான்.

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,

1971-ம் ஆண்டு பொதுவெளியில் நடந்த வக்கிரம் - வைரலாக்கும் ரஜினி ரசிகர்கள்..! - கொதிக்கும் இந்துக்கள்..! 1971-ம் ஆண்டு பொதுவெளியில் நடந்த வக்கிரம் - வைரலாக்கும் ரஜினி ரசிகர்கள்..! - கொதிக்கும் இந்துக்கள்..! Reviewed by Tamizhakam on January 19, 2020 Rating: 5
Powered by Blogger.