இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் இதுவா..? - யாருமே எதிர்பார்க்காத அப்டேட்..! - அவரே கூறியது..!


இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் " இந்தியன் 2". இந்த படத்தில் நாயகனாக நடிகர் கமல்ஹாசன் நடிக்கிறார். 

காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துக்கொண்டிருகின்றது.

இந்த படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறப்படுகின்றது. ஆனால், அதற்குண்டான அறிகுறி எதுவும் தெரியவில்லை. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் சமீப காலமாக வருவதில்லை.

இந்நிலையில், இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து நடிகை காஜல் அகர்வாலிடம் கேட்டபோது "இதுவரை நான் நடிக்காத ஒரு ரோல் இது. இது எல்லோரும் வழக்கமாக கூறுவது தானே என  நினைத்துவிட வேண்டாம். இது உண்மையிலேயே வித்தியாசமானது. இப்போதைக்கு, வேறு எதுவும் என்னால் கூறமுடியாது" என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து இவர் இந்தியன் தாதத்தாவுக்கு ஜோடியாக 80 வயது பாட்டியாக நடிக்கிறார் என்று ஒரு பக்கமும், இல்லை இல்லை படத்தின் வில்லியாக நடிக்கிறார் என்று இன்னொரு பக்கமும் கூறுகிறார்கள். எது எப்படியோ, இரண்டில் எது நடந்தாலும் அது ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒன்றாக தான் இருக்கப்போகிறது என்பது மட்டும் உண்மை.

இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் இதுவா..? - யாருமே எதிர்பார்க்காத அப்டேட்..! - அவரே கூறியது..! இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் இதுவா..? - யாருமே எதிர்பார்க்காத அப்டேட்..! - அவரே கூறியது..! Reviewed by Tamizhakam on January 20, 2020 Rating: 5
Powered by Blogger.