மாஸ்டர் 2nd லுக் போஸ்டர் இந்த போஸ்டரின் அட்டர் காப்பி..? - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்


இயக்குனர் அட்லியின் "பிகில்" படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடிக்கிறார் விஜய். அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். 

அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. அதைத்தொடர்ந்து டெல்லி, கர்நாடகா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் இந்தப் படத்துக்கு மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர். 

லோகேஷ்- கனகராஜ் இயக்கம் விஜய் உடன் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி என இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்தது. 

இந்நிலையில் 2019-ம் ஆண்டின் இறுதியில் டிசம்பர் 31-ம் தேதியன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் விஜய் மட்டுமே இடம்பெற்றிருந்தார். இன்று வெளியாகவிருந்த இந்த போஸ்டரில் விஜய்சேதுபதியும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால்,விஜய்சேதுபதி இடம் பெறாமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். இந்நிலையில், வழக்கமாக விஜய் படங்கள் என்றால் ஒரு தரப்பு ரசிகர்கள் அதிலிருந்து காப்பியடிச்சுடாங்க... இதுல இருந்து காப்பியடிசுடாங்க என்று கிளம்புமே.. அதே போல இந்த செகண்ட் லுக் போஸ்டருக்கும் ஒரு விஷயத்தை கிளப்பி விட்டிருகிறார்கள்.


தெலுங்கில் வெளியான நாணி நடிப்பில் வெளியான ஜென்டில்மென் படத்தின் போஸ்டரின் காப்பி தான் இந்த போஸ்டர் என்று மீம்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.

இரண்டு போஸ்டரிலும் கருப்பு உடை அணிந்திருபவர்கள் ஹீரோ பக்கம் பார்த்தவாறு நிற்க, ஹீரோ மட்டும் கேமராவை பார்த்து போஸ் கொடுதுப்பது போன்ற அமைப்பு தான் இந்த காப்பி பேஸ்ட் விவாகரத்திற்கு காரணமாக அமைந்து விட்டது.

மாஸ்டர் 2nd லுக் போஸ்டர் இந்த போஸ்டரின் அட்டர் காப்பி..? - இணையத்தில் வைரலாகும் புகைப்படம் மாஸ்டர் 2nd லுக் போஸ்டர் இந்த போஸ்டரின் அட்டர் காப்பி..? - இணையத்தில் வைரலாகும் புகைப்படம் Reviewed by Tamizhakam on January 15, 2020 Rating: 5
Powered by Blogger.