ஆரம்பமானது "அரண்மனை 3" - ஹீரோ, ஹீரோயின் யாரு தெரியுமா..?


இயக்குனர் சுந்தர் சி என்றாலே சீரியஸான ஒரு கதையை வைத்துக்கொண்டு காமெடியான திரைக்கதையை அமைத்து எப்படியாவது படத்தை கரை சேர்த்து விடுவார்.

ஆனால், இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான "ஆக்சன்" திரைப்படம் கிழக்கும் தெரியாமல், வடக்கும் தெரியாமல் போனது. இவர் இயக்கிய இயக்கிய அரண்மனை மற்றும் ’அரண்மனை 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. வசூலிலும் கல்லா கட்டியது.

ஆக்சன் படம் கொடுத்த அடியிலிருந்து மீண்டு வர அவர் ’அரண்மனை 3’என்ற படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் ரஜினியின் ’தலைவர் 168’ மற்றும் "தனுஷ் 44" போன்ற படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

"அரண்மனை 3" படத்தில் ஹீரோவாக நடிகர் ஆர்யா, சுந்தர் சி ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்க நாயகியாக ராஷி கண்ணா மற்றும் ஒரு முன்னணி நடிகையிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது என கூறுகிறார்கள். 

இந்த படத்தில் நடிகர் விவேக், யோகி பாபு உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கவுள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறுகிறார்கள்.

ஆரம்பமானது "அரண்மனை 3" - ஹீரோ, ஹீரோயின் யாரு தெரியுமா..? ஆரம்பமானது "அரண்மனை 3" - ஹீரோ, ஹீரோயின் யாரு தெரியுமா..? Reviewed by Tamizhakam on January 19, 2020 Rating: 5
Powered by Blogger.