போடு தகிட தகிட..! - "தளபதி 65" படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் இவர்கள் தான்.!


நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.

மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகும் முன்பே தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என கூறுகிறார்கள். இந்நிலையில், இந்த படத்தை இயக்கப்போவது துரோகி, இறுதி சுற்று, சூறரை போற்று என மூன்று தமிழ் படங்களை இயக்கிய  பெண் இயக்குனர் சுதா கொங்கரா என கூறுகிறார்கள்.

மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, தலைவா, தெறி என இரண்டு படங்களில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றியுள்ள ஜீ.வி.பிரகாஷ் இப்போது மூன்றாவது முறையாக விஜய்யுடன் கூட்டணி சேரவுள்ளார்.

மேலும், இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பதால் விஜய் ரசிகர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இன்னும், அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

போடு தகிட தகிட..! - "தளபதி 65" படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் இவர்கள் தான்.! போடு தகிட தகிட..! - "தளபதி 65" படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் இவர்கள் தான்.! Reviewed by Tamizhakam on January 29, 2020 Rating: 5
Powered by Blogger.