படப்பிடிப்பு முடியும் முன்பே 70,000,0000 ரூபாய் லாபம் - அதிர வைக்கும் மாஸ்டர் வியாபாரம்..!


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஹீரோவாக நடிகர் விஜய் மற்றும் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க, இளம் நடிகை மாளவிகா மோகனன் ஹீரோயினாகவும் மற்றும் பலர் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் மொத்த வியாபாரமும் முடிந்துவிட்டதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிகின்றன. 

நடிகர் விஜய்யின் சம்பளம உட்பட 150 கோடி பட்ஜெட்டாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இந்த படம் 'பிகில்' படத்தின் வியாபாரத்தை விட இப்படத்தின் வியாபாரம் அதிகமாகியுள்ளதாக கூறுகிறார்கள். 

அதன் படி, 

  1. தமிழ்நாட்டு உரிமை ரூ.80 கோடி
  2. வெளிநாட்டு உரிமை ரூ.30 கோடி
  3. தெலுங்கு உரிமை ரூ.10 கோடி
  4. கேரளா உரிமை ரூ.9 கோடி
  5. கர்நாடகா உரிமை ரூ.10 கோடி, 
  6. ஹிந்தி & சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமை ரூ.25 கோடி
  7. தமிழ் சாட்டிலைட் உரிமை ரூ.30 கோடி
  8. தமிழ் டிஜிட்டல் உரிமை ரூ.20 கோடி
  9. ஆடியோ உரிமை ரூ.5 கோடி 

என இதுவரை மொத்தம் ரூ.219 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெற்றிருக்கிறது என்கிறார்கள். 

படத்தின் பட்ஜெட் சுமார் 150 கோடி. எனவே, வெளியீட்டிற்கு முன்பாகவே சுமார் 70 கோடி வரை லாபத்தைப் பார்த்துள்ளார் நடிகர் விஜய்யின் உறவினரும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ.

விஜய்யின் 'மாஸ்டர்' படத்தின் வியாபாரம் 'தர்பார்' வியாபாரத்தை விடவும் அதிகமாக நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

படப்பிடிப்பு முடியும் முன்பே 70,000,0000 ரூபாய் லாபம் - அதிர வைக்கும் மாஸ்டர் வியாபாரம்..! படப்பிடிப்பு முடியும் முன்பே 70,000,0000 ரூபாய் லாபம்  - அதிர வைக்கும் மாஸ்டர் வியாபாரம்..! Reviewed by Tamizhakam on January 16, 2020 Rating: 5
Powered by Blogger.