உன்னுடைய சினிமா என்ட்ரிக்கு நான் பொறுப்பு, ட்ரெஸ்-ஐ கழட்டு என்றார் - தயாரிப்பாளர் மீது இளம் நடிகை புகார்..!


ஹிந்தியில் சன்சில்க் ரியல் எஃப் எம், ஹோஸ்டேஜஸ், தேரே லியே புரோ உட்பட சில படங்களில் நடித்தவர் நடிகை மஹ்லார் ரத்தோட். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததாள் இப்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

தற்போது, பேட்டி ஒன்றில் பேசிய அவர் நான் சினிமா வாய்ப்பு கேட்டு சென்ற போது பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

அவர் கூறியதாவது, நான் கடந்த 2008-ம் பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்ற கனவுடன் மும்பைக்கு வந்தவள். அப்போது, பட வாய்ப்புக்காக பிரபல தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்க சென்றேன்.


அந்த தயாரிப்பாளருக்கு அப்போது 65 வயது. என்னிடம் நன்றாக பேசிக்கொண்டிருந்தார். நான் உன்னில் ஒருவன், உன்னுடைய சினிமா என்ட்ரிக்கு நான் பொறுப்பு என்றார். அதனை தொடர்ந்து, உன்னோட ட்ரெஸ்-ஐ கழட்டு என்றார். நான் அதிர்ந்து போனேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை.

சிறிது நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தேன். பிறகு, எனக்கு நீங்கள் சினிமா வாய்ப்பே வாங்கி தர வேண்டாம் என்று கூறி விட்டுஅந்தஇடத்தில் இருந்து வெளியே ஓடி வந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.


வழக்கம் போல, இவரும் யாரால் பாலியல் துன்புருத்தலுக்கு உள்ளானேன் என்பதை கூற மறுத்து விட்டார். பிரபல நடிகை ஒருவர் இப்படி பாலியல் குற்றச்சாட்டை கூறியிருப்பது பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உன்னுடைய சினிமா என்ட்ரிக்கு நான் பொறுப்பு, ட்ரெஸ்-ஐ கழட்டு என்றார் - தயாரிப்பாளர் மீது இளம் நடிகை புகார்..! உன்னுடைய சினிமா என்ட்ரிக்கு நான் பொறுப்பு, ட்ரெஸ்-ஐ கழட்டு என்றார் - தயாரிப்பாளர் மீது இளம் நடிகை புகார்..! Reviewed by Tamizhakam on January 10, 2020 Rating: 5
Powered by Blogger.