‘இதெல்லாத்தையும்’... ‘சீனாவில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்’ - ‘கூறும் உண்மை இதுதான்’!


உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து உலக நாடுகள் அனைத்து விழிப்புடன் செயல் பட்டு வருகின்றன. அதே நேரத்தில், இந்த வைரஸ் குறித்த பல வதந்திகளும் பரவி வருகின்றன.

அதில் முக்கியமானவை, சிக்கன் சாப்பிட கூடாது, மட்டன் சாப்பிடக்கூடாது. கடைகளில் எதுவும் வாங்கி உண்ண வேண்டாம் என்பதில் ஆரம்பித்து எக்க சக்க அறிவுரைகளை ஆளாளுக்கு வாரி வழங்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால், மக்கள் மத்தியில் ஒரு வித பயம் நிலவுகிறது.

இந்நிலையில், சீனாவில் மருத்துவம் பயின்று வந்த மருத்துவ மாணவர் ஒருவர் கடந்த ஜனவரி 26-ம் தேதி இந்தியா திரும்பியிருந்தார். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் இவர் மருத்துவமையில் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் தங்க வைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து, அவருக்கு இந்த வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமித் பிரியன் "சமூக வலைதளங்களில் பரவி வரும் கொரோனா வைரஸ் தகவல்கள் முற்றிலும் வதந்தியானது. அதனை யாரும் நம்ப வேண்டாம். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீன அரசு தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறது’ என்று கூறியுள்ளார்.
Advertisement

Share it with your Friends