"அவர்களிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது" - நடிகை அமலாபால் விளாசல்


சமீப காலமாக சினிமா துறையில் நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குனர் உள்ளிட்ட பலதரப்பட்ட திரைப்பிரபலங்களை கவுரவப்படுத்த எக்கசக்க விருது விழாக்கள் பல்வேறு ஊடகங்கள் சார்பில் நடத்தப்படுகின்றன.

வாரா வாரம் படம் ரிலீஸ் ஆவது போல வாரா வாரம் ஏதாவது ஒரு மூலையில் விருது விழா என்ற பெயரில் நடிகர், நடிகைகளை அழைத்து விருது கொடுக்கும் விழாக்களும் நடைபெற்று வருகின்றன.

சில விருது விழாக்கள் மட்டுமே ரசிகர்களின் கவனத்தை பெரும் வகையில் இருக்கும். அப்படியான விருது விழாக்களில் கூட விருதுக்கு தகுதியானவர்களை வரவழைத்து விருது கொடுப்பதற்கு  பதிலாக, விருது விழாக்களுக்கு வரும் பிரபலங்களை தேர்வு செய்து அவர்களை கையில் விருதை திணித்து ஆஹா.. ஓஹோ என புகழ்ந்து அனுப்பி விடுகிறார்கள்.

இது குறித்து நடிகை அமலாபால் கூறியுள்ளதாவது, விருது விழாக்களுக்கு நடிகர்கள், நடிகைகள் வந்தாலே மிகப்பெரிய அளவில் அவர்ளை புகழ்ந்து தள்ளுகிறார்கள். 

ஆனால், அதையெல்லாம் போலி என விமர்சனம் செய்துள்ளார் நடிகை அமலா பால். அவர் அளித்த பேட்டி ஒன்றில் பேசும்போது, 'விருது விழாக்கள் என்றாலே போலி என்றாகிவிட்டது. மற்றவர்கள் நம்மை பற்றி புகழ்ந்து பேசுவதும் கூட போலியாகவே தெரியும். அவர்களிடம் இருந்து சற்று விலகி இருப்பது நல்லது என்று விளாசியுள்ளார் அமலா பால்.
Advertisement

Share it with your Friends