"தர்பார்" வசனம் நீக்கப்பட்டது குறித்து நடிகர் கமல்ஹாசன் அதிரடி..!


லைகா நிறுவனம் தயாரித்த "தர்பார்" திரைப்படம் கடந்த 9-ம்தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வசூல் மழையில் நனைந்து கொண்டிருகின்றது.

இந்த படத்தில் பிரபல அரசியல் பிரமுகர் சசிகலா-வை குறிப்பிட்டு தாக்குவது போல ஜெயிலில் இருந்து ஷாப்பிங்-லாம் போய்ட்டு வராங்க என்ற வசனம் இடம் பெற்றிருந்தது.

இந்த வசனம் இடம் பெற்ற காட்சியின் போது பல திரையரங்கில் இருந்த சில ரசிகர்கள் "சசிகலா.." என்று கத்தினார்கள். இது, சசிகாவின் வழக்கறிஞரின் காதுகளுக்கு செல்ல, வசனத்தை நீக்க வேண்டும். இல்லையென்றால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூயிருந்தார்.

இந்நிலையில், அந்த வசனம் நீக்கப்படுவதாக பட்டத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது. இதே நிறுவனம் தான் இந்தியன் 2 படத்தையும் தயாரித்து வருகின்றது.

இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் நடிகர் கமல்ஹாசன் இந்த விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, பராசக்தி காலத்தில் இருந்தே கருத்து சுதந்திரத்திற்கு பிரச்சனை உள்ளது. தர்பார் படத்தில் வசனம் நீக்கப்பட்டது கூட ஒருவகை ஷாப்பிங் தான்" என்று கூறியுள்ளார்.

"தர்பார்" வசனம் நீக்கப்பட்டது குறித்து நடிகர் கமல்ஹாசன் அதிரடி..! "தர்பார்" வசனம் நீக்கப்பட்டது குறித்து நடிகர் கமல்ஹாசன் அதிரடி..! Reviewed by Tamizhakam on January 10, 2020 Rating: 5
Powered by Blogger.