" நான் பண்ற பல விஷயங்கள் சமூக வழக்கத்திற்கு எதிரானது தான்" - வெளிப்படையாக கூறிய சன்னிலியோன்..!


நடிகை சன்னி லியோன் பற்றி அறிமுகம் தேவையில்லை. தற்போது, பாலிவுட் படங்களில் நடித்துவரும் இவர் " நான் செய்யும் பல விஷயங்கள் சமூக வழக்கத்திற்கு எதிரானது தான்" என்று பேசியிருப்பது செய்தியாகியுள்ளது.

அந்த மாதிரி படங்களில் நடித்து இளசுகள் மத்தியில் பிரபலமான நடிகை சன்னி லியோன், பாலிவுட் மூலம் இந்திய திரையிலகில் நடிகையாக காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் ஒரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

ஆம், இவரது கணவர் டேனியல் வெபர். நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் சன்னி, வாடகைத்தாய் மூலம் பெற்ற ஆசேர் மற்றும் நோவா சிங் என்ற குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். 

இந்நிலையில், இது குறித்து பேசிய அவர், நான் செய்யும் பல விஷயங்கள் சமூக வழக்கத்திற்கு எதிரானவை என எனக்கு நன்றாக தெரியும்.அதில் ஏதாவதுநோக்கம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான் செய்வது அப்படித்தான் உள்ளது என நம்புகிறேன். 

அதனால், அது பற்றி கவலைப்படாமல் எனக்கும், என்னுடைய குடும்பத்திற்கும் எது நல்லது எனநினைக்கிறேனோ அதையே இப்போதுவரை செய்து வருகிறேன்.

ஒருவரை பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது..! ஆனால், அவர் இப்படித்தான் என நமக்கு நாமே சொல்லிக்கொள்கிறோம். இது, அவர்களை நம்மிடம் இருந்து தள்ளி வைக்கிறது. என்கிறார் சன்னி லியோன்.
Advertisement

Share it with your Friends