மூணாவது லவ்வும் புட்டுகிட்டு போச்சு - நடிகைக்கு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்க்கும் குடும்பத்தார்.!


தன்னுடைய அப்பா பெயரை துணைப்பெயராக கொண்டு வளமாக வலம் வரும் அந்த பிரியமான நடிகையின் மூன்று காதலும் தோல்வியில் முடிந்து விட்டதாம். விஷயம் மெல்ல மெல்ல வெளியில்  வர ஆரம்பித்துள்ள நிலையில் நடிகைக்கு கால் கட்டு போட தவியாய் தவித்து வருகின்றனர் குடும்பத்தார்.

ஜாதகம், சடங்கு விஷயங்களில் அதீத நம்பிக்கை கொண்டுள்ள குடும்பத்தார் தங்கள் குடும்பத்திற்கு ஏற்ற வரனை வலை வீசி தேடி வருகிறார்களாம். அவர்களுடைய முக்கிய கண்டிஷனே மாப்பிள்ளை சினிமா, மீடியா சம்பந்தம் இல்லாத ஆளாக இருக்க வேண்டும் என்பது தானாம்.

ஆனால், நடிகையோ இப்போது தான் சினிமாவில் வளர்ந்து வரும்நடிகைகள் பாட்டியலில் இருக்கிறார். இந்நிலையில், திருமணம் பேச்சை எடுத்தாலே கடுப்பாகி விடுகிறாராம்.

நடிகையின் முதல் காதலர் வெளிநாட்டில் இருந்தார். ஆனால், இவர் சினிமாவில் நடிக்க சென்றது பிடிக்காமல் ப்ரேக்-அப் செய்து கொண்டார். அடுத்து தமிழில் இளம் நடிகருடன் ஒருவருடன் லவ்வி வந்தார் அம்மணி. ஆனால், அதுவும் ப்ரேக்-அப். மூன்றவதாக, பிக்பாஸ் நடிகர் ஒருவரை காதலித்து வந்த அவர் நாட்கள் செல்ல செல்ல அவருடைய நடவடிக்கை பிடிக்காமல் ஒதுங்கி கொண்டார்.

ஒருவரும் வெளிநாடுகளுக்கு சென்று ஒரே ஓட்டலில், ஒரே நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட தனித்தனியான புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் ஒரே தேதியில் பகிர்ந்திருந்தார்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்படி மூணு லவ்வும் புட்டுக்கிட்டு போனதால், அம்மணிக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்க வரன் தேடும் பணியில்மும்முரமாக இறங்கியுள்ளதாம் குடும்பம்.

மூணாவது லவ்வும் புட்டுகிட்டு போச்சு - நடிகைக்கு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்க்கும் குடும்பத்தார்.! மூணாவது லவ்வும் புட்டுகிட்டு போச்சு - நடிகைக்கு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்க்கும் குடும்பத்தார்.! Reviewed by Tamizhakam on January 14, 2020 Rating: 5
Powered by Blogger.