கொரோனா வைரஸ் குறித்த மீம்-ஐ பகிர்ந்த நடிகர் - வெடித்த சர்ச்சை - விளாசும் நெட்டிசன்கள்


சீனாவில் இறைச்சி மார்க்கெட்டில் இருந்து உருவான "கொரோனா" என்ற புதிய ஆட்கொல்லி வைரஸ் பரவாமல் தடுக்க உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு விழிப்புடன் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. 

சீனாவில் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து திரும்பிய இந்தியர்கள் சிலருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், "கொரோனா" வைரஸ் பற்றிய தகவல்கள் மற்றும் மீம்கள் பரவி வரும் நிலையில் பிரபல ஹிந்தி நடிகர் அர்ஷத் வார்சி மீம்-ஐ பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

சினிமா படத்தில் இருந்து ஒரு சீனை கருத்துப்படமாக வைத்து மீமாக பகிர்ந்துள்ளார். அதில், வைரஸ் பரவாமல் தடுக்க சீனர்களை ஆம்புலன்சில் ஏற்றுங்கள். பிறகு, அவர்களை கொலை செய்து மூட்டை கட்டிவிடுங்கள் என்பது போல அந்த மீம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இது ஒரு வகையில் இனவெறியை தூண்டும் வகையில் உள்ளதால் இந்த மீமை நீக்க வேண்டும் என்று அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.
Advertisement

Share it with your Friends