"ஒவ்வொரு நாளும் பிரகாசியுங்கள்..." - ஸ்லீவ்லெஸ் உடையில் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படங்கள்...!


பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. 

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே இவரது நடவடிக்கைகளால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார். 

பின்னர் இயக்குநர் சேரனுடனான மனக்கசப்பு, கவினுடனான காதல், சாக்‌ஷி அகர்வாலுடனான மோதல் என பார்வையாளர்களுக்கு தீனி போட்டுக் கொண்டிருந்த லாஸ்லியா 105 நாட்கள் தங்கியிருந்து 3-ம் இடத்தைப் பிடித்தார். 

மேலும் நிகழ்ச்சியின் இடையே தொலைபேசி வாயிலாக உரையாடிய பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், லாஸ்லியாவுக்கு திரைத்துறை பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.


சினிமா வாய்பிற்காக காத்திருக்கும் லாஸ்லியா சினிமா நடிகைகள் போல அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


அந்தவகையில், ஒவ்வொரு நாளும் பிரகாசியுங்கள் என கூறி ஸ்லீவ்லெஸ் உடையில் அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன."ஒவ்வொரு நாளும் பிரகாசியுங்கள்..." - ஸ்லீவ்லெஸ் உடையில் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படங்கள்...! "ஒவ்வொரு நாளும் பிரகாசியுங்கள்..." - ஸ்லீவ்லெஸ் உடையில் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படங்கள்...! Reviewed by Tamizhakam on January 12, 2020 Rating: 5
Powered by Blogger.