கோடி ரூபாய் கொடுத்தாலும் அவருக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் - கேத்ரின் தெரேசா பதிலால் கடுப்பில் முன்னணி நடிகர்..!


தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான "மெட்ராஸ்" படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா, கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் பரபரப்பான நடிகையாக இருக்கிறார். 

ஒல்லியான வாட்டசாட்டமான தேகம் என தனது வளைவு நெழிவுகளால் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார் அம்மணி. தெலுங்கில் தற்போது விஜய் தேவரகொண்டாவின் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்தில் நடித்துள்ளார். 

இப்படம் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக ரிலீசாகிறது. இந்நிலையில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க கேத்ரின் தெரசாவை படக்குழுவினர் அணுகியுள்ளனர்.

இதனை தொடர்ந்து பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக நடிக்கிறார் கேத்ரின் தெரேசா நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியாகின. ஆனால், அது உண்மையல்ல என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

ஆம், கேத்ரின் தெரேசா  கோடி ரூபாய் கொடுத்தாலும் பாலகிருஷ்ணா போன்ற வயதான ஹீரோவுடன் நடிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டராம். 


இதனால் கேத்ரின் மீது செம கோபத்தில் இருக்கிறாராம் பாலையா. படக்குழுவினர் முதலில் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை தான் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக்க நினைத்தனர். 

ஆனால் சோனாக்ஷி நடிக்க முடியாது என மறுத்துவிட்டார். இந்நிலையில் கேத்ரின் தெரசாவும், பாலையா படத்தை மறுத்துவிட்டதால், வேறு ஹீரோயினை தேடும் பணியில் படக்குழு இறங்கியுள்ளது.
Advertisement

Share it with your Friends