"எனக்கு இது புதுசு இல்ல, ஏண்டா முட்டாள் என ப்ரூவ் பண்றீங்க.?" - தி.க-வினரை விளாசிய நடிகை குஷ்பு...!


நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் பேசிய பேச்சை பலரும் கேட்டிருக்க மாட்டார்கள். ஆனால், அதனை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது தான் திராவிட கட்சிகளின் சாதனை.

ஹிந்து கடவுளான ஸ்ரீராமர் மற்றும் சீதை உருவ சிலைகள் ஆடையின்றி ஊர்வலாமாக எடுத்துசெல்லப்பட்டு அவமானப்படுத்தப்பட்டன என்று நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடந்த துக்ளக் விழாவில் பேசியுள்ளார்.

இது சார்ந்த ஆதாரங்களும் இணையத்தில் ரஜினி ரசிகர்களால் வெளியிடப்பட்டது. இந்து மக்களின் பூமியான தமிழ்நாட்டில் பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என இந்து கடவுள்களை மட்டும் அசிங்கப்படுத்துவது எத்தகைய அரசியல் என்று மக்கள் சிந்திக்க தொடங்கியுள்ளனர். 

இந்த நிலையில், நடிகை குஷ்பு ரஜினியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியுள்ளார். இதனை பார்த்த தி.க.வினர் நீங்கள் ரஜினியுடன் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளீர்கள். அதனால், ரஜினிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் நிற்கிறீர்கள் என்று கிண்டல் அடித்தனர்.

இதனை பார்த்த நடிகை குஷ்பு, ரஜினியுடன் நான் ஏற்கனவே நடித்துவிட்டேன். இது ஒன்றும் எனக்கு புதுசு இல்லை. ஏண்டா முட்டாள் என ப்ரூவ் பண்றீங்க".? என விளாசியுள்ளார் குஷ்பு.
Advertisement

Share it with your Friends