என்னுடைய முதல் க்ரஷ் அவர் மேல தான் - இளம் நடிகை வித்யா பிரதீப் ஒப்பன் டாக்


இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரனவத் மற்றும் அரவிந்த்சாமிநடிக்கும்திரைப்படம் "தலைவி". இந்த படம் மறைந்த முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்கையை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகின்றது.

இந்த படத்தில் நடிகை கங்கனா ரணவத் ஜெயலலிதா-வாக நடிக்க நடிகர் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராக நடிக்கிறார். இந்த படத்தின் நானும் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார் இளம் நடிகை வித்யா பிரதீப்.

இவர், "அவள் பெயர் தமிழரசி" , "சைவம்" , "பசங்க 2", "மாரி 2" போன்ற  படங்களில் நடித்திருந்தார். கடைசியாக, அருண் விஜய்யின் தடம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

தலைவி படத்தில் அரவிந்த்சாமியின் ஃப்ளாஷ்பேக் காட்சியில் நடித்துள்ளாரம் வித்யா பிரதீப். இது குறித்து அவர் கூறுகையில், நாள் பள்ளியில் படிக்கும் போதே என்னுடைய கிரஷ் அரவிந்த் சாமி சார் தான். இப்போது, அவருடன் சேர்ந்து நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய கனவு கை கூடியுள்ளது என கூறியுள்ளார்.

என்னுடைய முதல் க்ரஷ் அவர் மேல தான் - இளம் நடிகை வித்யா பிரதீப் ஒப்பன் டாக் என்னுடைய முதல் க்ரஷ் அவர் மேல தான் - இளம் நடிகை வித்யா பிரதீப் ஒப்பன் டாக் Reviewed by Tamizhakam on January 19, 2020 Rating: 5
Powered by Blogger.