"தமிழ் சினிமாவில் மரியாதையே இல்லைங்க" - பேட்ட, தர்பார் பட பிரபலம் ஆதங்கம்..!


தமிழ் சினிமா என்றால் ஹீரோக்களுக்கு மட்டுமே மரியாதையை என்ற நிலை இப்போது தான் மெல்ல மெல்லமாறி இயக்குனர்களுக்கும் மரியாதை கிடைத்து வருகின்றது.

ஒரு காலத்தில், ஹீரோ யாரு என்று படத்திற்கு சென்ற ரசிகர்கள் காலம் எல்லாம் மலையேறிவிட்டது. டைரக்டர் யாரு என்று கேட்டு படத்திற்கு செல்லும் காலம் இது. 

இந்நிலையில், தமிழ் சினிமாவில் காஸ்ட்யூம் டிசைனர்களுக்கு மரியாதையே இல்லை என சலித்துக்கொண்டிருக்கிறார் பாலிவுட்டை சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் நிஹாரிகா, இவர் பேட்ட, தர்பார் என இரண்டு தமிழ் படங்களில் மட்டும் தான் பணியாற்றியுள்ளார்.

பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் காஸ்டியூம் டிசைனர் இவர். இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘ரஜினி சார், முருகதாஸ் சார் இரண்டு பேருடன் எனக்கு எந்த வருத்தமோ, கோபமோ இல்லை.
என்னை பெரிதும் மதித்தார்கள். 

ஆனால், தயாரிப்பு நிறுவனம் எனக்கான மரியாதை தரவில்லை, இன்னும் சொல்ல வேண்டுமென்றால், தமிழ் திரையுலகில் டிசைனர்களுக்கு மரியாதை இல்லை’ என வேதனையுடன் கூறியுள்ளார்.
Advertisement

Share it with your Friends