ரெளடி பேபி பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட நடிகை சாயீஷா - குவியும் லைக்குகள் - வைரல் வீடியோ


நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் நடிகை சாயீஷா. 

வனமகன் படத்தில் டாம்ன் டாம்ன் என்ற பாடலில் வெடுக் வெடுக்கென இடுப்பை ஆட்டி இளசுகளின் இதயத்தை ஆட்டினார் அம்மணி. அடுத்தடுத்த படங்களில் நடித்துவந்த இவர் கஜினிகாந்த் பட்டத்தின்போது நடிகர் ஆர்யாவுடன் காதல் ஏற்பட்டு சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். 

திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் அம்மணி. இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மாரி 2 படத்தில் தனுஷ் - சாய்பல்லவி நடனத்தில் வெளியான ரௌடி பேபி பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்த பாடலுக்கு தற்போது சாயீஷா செம்ம ஆட்டம் ஆடி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். தற்போது இந்த நடனம் ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

ரெளடி பேபி பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட நடிகை சாயீஷா - குவியும் லைக்குகள் - வைரல் வீடியோ ரெளடி பேபி பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட நடிகை சாயீஷா - குவியும் லைக்குகள் - வைரல் வீடியோ Reviewed by Tamizhakam on January 20, 2020 Rating: 5
Powered by Blogger.