அவர் மேல் எனக்கு பைத்தியம் - வெளிப்படையாக கூறிய நடிகை ராதிகா..!


கடந்த 1978-ம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். நடிகவேல் எம்.ஆர்.ராதாவின் மகள் என்பதால் இவருக்கு எளிதில் சினிமா வாய்ப்பு கிடைத்து விட்டது. சினிமாவில் அறிமுகமானது முதல் இன்று வரை சினிமா , தொலைக்காட்சி என ஏதாவதொரு ஊடகம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவே உள்ளார்.

இவருடன் சினிமாவிற்கு வந்த நடிகைகளும், இவருக்கு பின் சினிமாவிற்கு வந்து பிரபலமான பல நடிகைகளும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர். ஆனால், ராதிகா அவர்களுக்கெல்லாம் விதி விலக்கு. தற்போது, சித்தி 2 என்ற சீரியலில் களமிறங்கியுள்ளார்.

கடந்த 1985-ல் நடிகர் பிரதாப் போத்தனை திருமணம் செய்து கொண்டா ராதிகா அடுத்த ஒரே ஆண்டில், அதாவது 1986-ம் ஆண்டே அவரை விவாகரத்தும் பெற்றார். தொடர்ந்து, 1990-ம் ஆண்டு லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட அவர் 1992-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார்.

அதன் பிறகு,கிட்டத்தட்ட பத்து ஆண்டு தனியாகவே வாழ்ந்து வந்த அவர் தனது 37-வது வயதில் நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் பேட்டியில் கலந்து கொண்ட ராதிகாவிடம் , சரத்குமார் பற்றி கேள்விஎழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் சரத்குமார் என்றால் எனக்கு பைத்தியம் Im Mad about him என கூறியுள்ளார்.
Advertisement

Share it with your Friends