கட்டிலில் படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நாயுடன் ஒப்பிட்ட நடிகை ரைசா - வைரல் புகைப்படம்..!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் ரைசா வில்சன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தற்போது தமிழ் சினிமாக்களில் நடித்து வருகின்றனர். 

ஆனால், ரைசா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிறகு கடந்த வருடம் வெளியான பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களை வசியப்படுத்தினார். 

அதனைத்தொடர்ந்து பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் வெளிவராமல் ட்ராப் செய்யப்பட்டு விட்டது. அதனை தொடர்ந்து வெளியான ஆதித்ய வர்மா படத்தில் ரைசா-வுக்கு பதிலாக ப்ரியா ஆனந்தை ஒப்பந்தம் செய்து விட்டனர். 

இதனால், ஏமாந்து போனார் ரைசா. அதன் பிறகு தற்போது ஜி.வி. பிரகாஷ் உடன் காதலிக்க யாருமில்லை என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் விஷ்ணு விஷாலுடன் FIR, அலைஸ் என்று படங்கள் கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் வெளியான தனுஷ் ராசி நேயர்களே படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இணையத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். ஆனால், தற்போது வித்தியாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கலகலக்க செய்துள்ளார்.

கட்டிலில் படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதனை நாயுடன் ஒப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதோ அந்த புகைப்படம்,

View this post on Instagram

A post shared by Raiza Wilson (@raizawilson) on

கட்டிலில் படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நாயுடன் ஒப்பிட்ட நடிகை ரைசா - வைரல் புகைப்படம்..! கட்டிலில் படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நாயுடன் ஒப்பிட்ட நடிகை ரைசா - வைரல் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on January 09, 2020 Rating: 5
Powered by Blogger.