"திரௌபதி" படம் குறித்து மோசாமான விமர்சனத்தை வைத்த இயக்குனர் நவீன் முகமது அலி - ரசிகர்கள் பதிலடி..!


காதல் என்ற பெயரில் பெரிய இடத்து பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்ற பெயரில் அழைத்து சென்றுவிட்டு பிறகு, அவர்களது பெற்றோர்களை அழைத்து உன்னோட பொண்ணு எங்க கிட்ட தான் இருக்கா, பணம் கொடுத்துவிட்டு கூட்டிக்கொண்டு செல் என்று மிரட்டும் கும்பல் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பெண்ணை அழைத்து வந்தது போல அப்படியே கொடுத்தால் ஒரு தொகை, கர்ப்பமாக்கி கொடுத்தால் ஒரு தொகை என இவர்கள் அட்டூழியம் தொடர்கிறது.

ஆம், ஆள் கடத்தல் என்றால், போலீஸ், சட்டம், கோர்ட் என நியாயம் கேட்டு செல்லலாம். ஆனால், இந்த சூழலில் போலீசிடம் சென்றால் நாடக காதலால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்ற விபரம் தெரியாமல் நான் விரும்பி தான் இவனுடன் வந்தேன். யாரும் என்னை கடத்திக்கொண்டு வரவில்லை என்று அந்த பெண்ணே கூறுவாள். 

அந்த அளவுக்கு அந்த பெண்ணை மூளைச்சலவை செய்து வைத்திருப்பார்கள். ஒருவேளை பெண்ணை பெற்றவர்கள் பணம் கொடுக்க மறுத்தாலே, அல்லது அதையும் மீறி போலீஸ் , கோர்ட் என சென்றாலோ.? அந்த பெண்ணை கொலை செய்து விட்டு அந்த பழியை அவரது பெற்றோர் மீதே ஆணவ கொலை என்று திருப்பி விட்டு விடும் சம்பவங்களும் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. 

இப்படியெல்லமா நடக்கும் என்று நீங்கள் உதாசினமாக பார்க்கலாம். இது அப்பட்டமான உண்மை. ஆனால், பெண்ணின் பெயர் கெட்டுப்போய்விடும், குடும்ப மானம் போய்விடும் என்று இந்த விஷயங்கள் வெளியே வராமல் பெண்ணின் பெற்றோர்களே பார்த்துக்கொள்வார்கள். 

சில சமயம் மீடியாக்களின் கையில் காசை திணித்து இந்த தகவலை பிரசுரிக்க வேண்டாம் என பெண்ணை பெற்றவர்கள் கதறிய நிகழ்வுகளும் நடந்துள்ளன. 

இதனால், தமிழகத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது பதற வைக்கும் உண்மை. இந்நிலையில், சமீபத்தில் வெளியான திரௌபதி படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. சாதி பற்றிய பேச்சுகள் மற்றும் விவாதங்கள் மிக அதிக அளவில் நடந்தது.

இந்நிலையில், மூடர் கூடம், கொளஞ்சி போன்ற படங்களை இயக்கிய நவீன் முகமது அலி தனது ட்விட்டரில் இந்த படத்தின் கதை பற்றியும், அதற்கு பின்னால் இருக்கும் உண்மை பற்றியும் ஒன்றும் தெரியாமல் ஒரே வார்த்தையில் 'குப்பை' என விமர்சித்துள்ளார்.

ட்விட்டரில் ஒரு நபர் திரௌபதி படம் பற்றி கருத்து கேட்டதற்கு "குப்பை குறித்து கருத்து சொல்லனுமா" என கேட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
"திரௌபதி" படம் குறித்து மோசாமான விமர்சனத்தை வைத்த இயக்குனர் நவீன் முகமது அலி - ரசிகர்கள் பதிலடி..! "திரௌபதி" படம் குறித்து மோசாமான விமர்சனத்தை வைத்த இயக்குனர் நவீன் முகமது அலி - ரசிகர்கள் பதிலடி..! Reviewed by Tamizhakam on January 11, 2020 Rating: 5
Powered by Blogger.